சிதம்பரம் அருகே தீவிபத்தில் 4 வீடுகள் எரிந்து ரூ.2 லட்சம் சேதம்!
சிதம்பரம் அருகே உள்ள துணிஞ்சிரமேடு கிராமத்தில் நேற்று(சனிக்கிழமை) இரவு அமுதா என்பவரது வீட்டில் மின்கசிவினால் தீப்பற்றியது. இதில் கேஸ் சிலிண்டர் வெடித்து அருகாமையிலும் பரவி அவரது சகோதரர்களான மோகன், ரகு, பரசுராமன் ஆகியோரது வீடுகளுக்கு தீப்பரவி எரிந்து சேதமுற்றது. மேலும்
சிதம்பரம் அருகே மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டு 4 குடிசை வீடுகள் எரிந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமுற்றன.
சிதம்பரம் அருகே உள்ள துணிஞ்சிரமேடு கிராமத்தில் நேற்று(சனிக்கிழமை) இரவு அமுதா என்பவரது வீட்டில் மின்கசிவினால் தீப்பற்றியது. இதில் கேஸ் சிலிண்டர் வெடித்து அருகாமையிலும் பரவி அவரது சகோதரர்களான மோகன், ரகு, பரசுராமன் ஆகியோரது வீடுகளுக்கு தீப்பரவி எரிந்து சேதமுற்றது. மேலும் அருகாமையில் சேகர் என்பவரது ஆட்டு கொட்டகையில் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம் எரிந்து சேதமுற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள எரிந்து சேதமுற்றன.