மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.4.19 லட்சத்தில் 87 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்
பொதுமக்கள் பல்வேறு உதவிகளை கேட்டு மனுவை அளிக்கின்றனர். அந்த மனுக்கள் மீது குறிப்பிட்ட நாளுக்குள் பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு நலத்திட்ட உதவி கிடைப்பதற்கு அதிகாரிகள் உதவ
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.4.19 லட்சத்தில் 87 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசியதாவது:
பொதுமக்கள் பல்வேறு உதவிகளை கேட்டு மனுவை அளிக்கின்றனர். அந்த மனுக்கள் மீது குறிப்பிட்ட நாளுக்குள் பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு நலத்திட்ட உதவி கிடைப்பதற்கு அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும். அதோடு, அரசு திட்டங்களை பெற தகுதிகளையும், அதற்கு ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவரமாக எடுத்துரைக்க வேண்டும். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் உடனுக்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், அந்த மனுவின் உண்மைத் தன்மையை அறிய அந்தந்த கிராமங்களுக்கு நேரில் சென்று விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும். எனவே குறிப்பிட்ட நாளுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
Advertisement
அதையடுத்து, பிற்பட்டோர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு தலா ரூ.2569 மதிப்பிலான தேய்ப்பு பெட்டிகளையும், 15 பேருக்கு தலா 2890 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை மூலம் தலா ரூ.3852 மதிப்பில் 10 பேருக்கு மோட்டார் பொறுத்திய தையல் இயந்திரமும், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் சிறப்பு பள்ளிகளில் படித்து முறைசார் பள்ளிகளில் 10 மற்றும் 12-வது தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு பயில்வதற்கு தலா ரூ.6 வீதம் 52 பேருக்கு என மொத்தம் 87 பயனாளிகளுக்கு ரூ.4.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜூ, திட்ட இயக்குநர் பிரபாகர், மாவட்ட வழங்கல் அலுவலர் வசந்தி, சமூக பாதுகாப்பு திட்டம் மேரிபாய், தனித்துணை ஆட்சியர் ஜெயஸ்ரீ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மணிமாறன் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.