முகப்பு
தற்போதைய செய்திகள்

மானாமதுரை அருகே கத்தியக் காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி  நகை, பணத்தை பறித்துச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். மானாமதுரை அருகே அன்னியனேந்தல் கிராமத்தைச்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:08 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி  நகை, பணத்தை பறித்துச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். மானாமதுரை அருகே அன்னியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமி இவர் இங்குள்ள தனது தோப்புக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி வழிமறித்து லெட்சுமியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி ரொக்கப் பணம் ரூ 10 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இச் சம்பவம் குறித்து லெட்சுமி மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்கு பதிந்து வீரபாண்டியை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.