முகப்பு
தற்போதைய செய்திகள்

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம் சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு பயிற்சி

குழந்தைகள் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஆண்டு தோறும் ஜூன்-12ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு

Updated On : 10 ஜூன், 2013 at 4:48 PM
பகிர்:

விருதுநகர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம் மூலம் குழ்நதைகள் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

குழந்தைகள் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஆண்டு தோறும் ஜூன்-12ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களிலும் காலை 11 மணிக்கு மாணவர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் குழந்தை தொழிலாளர்களை அகற்றுவதற்கான உறுதிமொழியேற்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, அனைத்து அலுவலகங்களிலும், பள்ளிகள் மற்றும் ஒவ்வொரு ஊராட்சி அலுவலகங்களிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை நடவடிக்கைகான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டுவதற்காக ஏற்கனவே ஆட்சியரால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மூலமாக குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி தலைமையாசிரியர்கள், காவல் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் வருகிற 11,13,14,25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது.இதை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடங்கி வைக்கப்படவும் இருக்கிறது. இதில், சிவகாசி, விருதுநகர், சாத்தூர் வட்ட எல்லையில் நாள் முழுவதும் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு குறித்து பிரச்சாரம் செய்யப்பட உள்ளதாகவும் குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.