தற்போதைய செய்திகள்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறு ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறு ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தை இன்று

எஸ். பாண்டியன்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறு ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுப்புச் செய்யவில்லை. இந்த மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பகுதிகளான காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி வட்டார பகுதிகளில் பெரும்பாலன விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்கவில்லை. மேலும், கிராம நிர்வாக அதிகாரிகள் உட்கார்ந்த இடத்திலேயே கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார பகுதிகளில் அதலைப்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களில் வீட்டு மனைகளான நிலங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதனால், வறட்சி நிவராண கணக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நிலங்களை மறுபடியும் கணக்கெடுப்புச் செய்து உரிய தொகையை ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயமுருகன் தலைமையில், ஆர்.ஆர்.நகர் பகுதி செயலாளர் கோபால்சாமி முனனிலையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT