முகப்பு
தற்போதைய செய்திகள்

எரிவாயு அடுப்பு பழுது நீக்கம் செய்கிறவரிடம் வழிப்பறி செய்த ரவுடி கைது

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்பாண்டி(40). இவர் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பகுதியில் எரிவாயு அடுப்பு பழுது நீக்கம் செய்து தரும் தொழிலை செய்து வருகிறார். அதேபோல், காலையில் முத்தால்

Updated On : 11 ஜூன், 2013 at 3:50 PM
பகிர்:

விருதுநகரி்ல் எரிவாயு பழுது நீக்கம் செய்கிறவரை வழிமறித்து கத்தியைத் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை பாண்டியன் நகர் போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்பாண்டி(40). இவர் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பகுதியில் எரிவாயு அடுப்பு பழுது நீக்கம் செய்து தரும் தொழிலை செய்து வருகிறார். அதேபோல், காலையில் முத்தால் நகரில் பழுது நீக்கம் செய்யும் மேற்கொண்டு விட்டு, பேராலி சாலையில் வந்து கொண்டிருந்தாராம். அப்போது, இதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்ற நாகராஜன்(39) என்பவர் திடீரென வழிமறித்தாராம்.

பின்னர் இப்பகுதிக்கே நான்தான் ரவுடி என்று கூறி கத்தியைக் காட்டி மிரட்டியதோடு ராஜேஷ்பாண்டியின் சட்டப்பையில் இருந்த ரூ.500-யும் எடுத்துக் கொண்டுள்ளார். உடனே இது தொடர்பாக அருகில் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் ரவுடி பாண்டியராஜனை கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.   

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.