தற்போதைய செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 5 சத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் நெய்வேலியில்

VASUDEVAN.K

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி தொடர்பாக போராட்டங்கள் நடத்த குற்றவிசாரணைமுறை சட்டப்பிரிவு 144-ன் கீழ் தடைவிதித்து ஆட்சியர்(பொறுப்பு) ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் உத்தரவிட்டார்.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 5 சத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் நெய்வேலியில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்து இருந்தது. ஆனால் சீமான் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க போலீஸார் மறுத்து விட்டனர்.

இந்த நிலையில் என்எல்சி தொடர்பாக கடலூர் மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சிகளோ, தொழிற்சங்கங்களோ, அமைப்புகளோ ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம், போராட்டம் நடத்த குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 144-ன் கீழ் தடை விதித்து மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு)ராஜேந்திரன் நள்ளிரவில் உத்தரவு பிறப்பித்தார். இந்த தடை உத்தரவு கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று(ஜுன்12) முதல் 15 நாட்களுக்கு அமலில் இருக்கும். இதன்படி என்எல்சி தொடர்பாக அரசியல் கட்சிகளோ, தொழிற்சங்கங்களோ, அமைப்புகளோ மாவட்டத்தின் எப்பகுதியிலும் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT