விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய சமூகப்பணியாளர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்து வருகிறவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் தேர்வு குழு மூலம் தேர்வு செய்து சுதந்திர தின விழாவில் முதல்வரால் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிகழ் ஆகியவை அளிக்கப்பட இருக்கிறது.
இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், சேவை புரிந்த தொண்டு நிறுவனங்களுக்கு 10 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு சேவை புரிந்த சமூகப்பணியாளர் மற்றும் மருத்துவருக்கு தலா 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம தங்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்பட இருக்கிறது.
அதேபோல், நிகழாண்டில் சிறப்பாக பணியாற்றி வருகிறவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், ஆட்சியர் வளாகம், விருதுநகர் என்கிற முகவரிக்கு வருகிற 28-ம் தேதிக்குள் அஞ்சலிலோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்கலாம். எனவே மொத்த விண்ணப்பங்களையும் தேர்வு குழு மூலம் பரிசீலனை செய்து தேர்வு செய்யப்பட்டு கௌரவம் அளிக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.