முகப்பு
தற்போதைய செய்திகள்

தேசிய அளவிலான தேர்விற்கு இணையான நுழைவுத்தேர்வு: அண்ணாமலைப் பல்கலை நிர்வாகி

தேசிய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வுக்கு இணையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. அதற்கு இங்குள்ள கட்டமைப்பு வசதிகள் பயன்பட்டது என பல்கலைக்கழக

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:11 PM
பகிர்:

தேசிய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வுக்கு இணையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. அதற்கு இங்குள்ள கட்டமைப்பு வசதிகள் பயன்பட்டது என பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தெரிவித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல கட்டமைப்புத்துறை சார்பில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திலிருந்து ரூ.52 லட்சம் ஆராய்ச்சி நிதியை பெற்று மூன்று ஆண்டுகள் நடைபெற்ற ஆராய்ச்சிக்கான ஜியோபாலின் பற்றிய தேசிய கருத்தரங்கு பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.கருத்தரங்கில் பல்கலை. நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:

புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுவதன் மூலம் சுற்றுச்சூவலை பாதுகாக்கலாம். அதற்கு ஆராய்ச்சியாளர்கள் முன் வர வேண்டும் சிமெண்ட் இல்லாமல் கான்கிரீட் தயாரிக்கும் உத்திதான் ஜியோபாலின் கான்கீரீட் என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.

புதுதில்லி தேசிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக இயக்குநர் எம்.சலாஹூதின் பேசுகையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திலிருவ்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தேவையான நிதி ஆதாரத்தை பெருமளவில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டமைப்புத்துறைக்கு வழங்கப்பட்டு சிமென்ட் பயன்படுத்தாமல் தயாரிக்கப்படும் ஜியோபாலிமர் கான்கிரீட் என்ற புதிய யுத்தியை கட்டுமானத்தில் பெருமளவில் புகுத்தினால் சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கலாம் என்றார்.

திருவள்ளூவர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எல்.கண்ணன் பேசுகையில் தென்னிந்தியாவில் அதிகளவில் ஆராய்ச்சி நிதியை பெற்ற பல்கலைக்கழகமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக விளங்குவதாக தெரிவித்தார். பொறியியல் புல முதல்வர் எஸ்.வேலுசாமி வாழ்த்துரையாற்றினார். கட்டமைப்புத்துறை தலைவர் சி.ஆண்டனிஜெய்சேகர் வரவேற்றார். இணைப் பேராசிரியர் எஸ்.திருஞானசம்பந்தம் நன்றி கூறினார். கருத்தரங்கில் பொதுப்பணிததுறை, நெய்வேலி நிலக்கரி நிறுவன பொறியாளர்கள், கட்டுமானப் பொறியாளர்கள், பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் பெருமளவில் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →