புதுச்சேரி, சிதம்பரம் பகுதியில் செயல்படாத நிலையில் ரிலையன்ஸ் நெட்வொர்க்! வாடிக்கையாளர்கள் அவதி
சிதம்பரம் பகுதியில் ரிலையன்ஸ் லேண்ட்லைன் பிராட்பேன்ட் இணைப்புகள் சுமார் 600 பேர் வைத்துள்ளனர். இவையல்லாமல் யுஎஸ்பி மோடம் இணைப்புகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைத்துள்ளனர். இதே
சிதம்பரம் மறறும் புதுச்சேரி பகுதியில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ரிலையன்ஸ் நெட்வொர்க் செயல்படாததால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி்க்குள்ளிகாயுள்ளனர்.
சிதம்பரம் பகுதியில் ரிலையன்ஸ் லேண்ட்லைன் பிராட்பேன்ட் இணைப்புகள் சுமார் 600 பேர் வைத்துள்ளனர். இவையல்லாமல் யுஎஸ்பி மோடம் இணைப்புகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைத்துள்ளனர். இதே போன்று புதுச்சேரியிலிரும் ஆயிரக் கணக்கான இணைப்புகள் உள்ளன. சிதம்பரம் மற்றும் புதுச்சேரி பகுதியில் ரிலையன்ஸ் பிராட்பேன்ட் நெட்வொர்க்க கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் செயல்படால் போனதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மின்சப்ளை பில் கட்டப்படாததால் சர்வர் துண்டிக்கப்பட்டதால் செயல்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறிதத்து ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி தியாகராஜன் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்தது: கடந்த 13 தினங்களாக செயல்படாமல் உள்ளது உண்மைதான். தற்போது மின்சப்ளைக்காக செக் கொடுக்கப்பட்டு விட்டது. புதுச்சேரியில் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. சிதம்பரம் பகுதியில் இன்று மாலை முதல் செயல்படத் தொடங்கும் என தெரிவித்தார்.