தற்போதைய செய்திகள்

மதுரை அரசு மருத்துவமனையில் லேப்டாப் திருட்டு

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலை லேப்டாப் திருட்டுப்போயுள்ளது.

ஜெயப்பாண்டி

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலை லேப்டாப் திருட்டுப்போயுள்ளது.

மதுரை  அரசு மருத்துவமனையில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிறந்த குழந்தைகளுக்கான குறை அறியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக மருத்துவமனையில் வைத்திருந்த லேப்டாப் திருடப்பட்டது.

இதே மருத்துவமனையில் இன்று காலை பிறந்த ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டது.  இதையடுத்து, ஒரே நாளில் குழந்தை கடத்தல் மற்றும் லேப்டாப் திருட்டுப் போனது உயரதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இந்த மருத்துவமனையில், லஞ்சம் வாங்கிய மருத்துவமனை டீன் அலுவலக நிர்வாக பிரிவு உதவியாளர் சங்கரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.  இந்த கைது சம்பவத்துக்கும், இன்றைய சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT