முதன்மைக் கல்வி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடந்த முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாரதி தலைமை வகித்தார். செயலாளர் ஆதவன் முன்னிலை வகித்தார்.
ஆங்கில வழிக்கல்வி முறையை எதிர்த்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடந்த முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாரதி தலைமை வகித்தார். செயலாளர் ஆதவன் முன்னிலை வகித்தார். இதில், கல்விக் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். தாய்மொழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தாமலும், ஆங்கில வழிக் கல்வியை கட்டயமாக திணிக்க கூடாது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் 100- பேர் வரையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.