முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் கடை பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள செல்போன், கேமராக்கள் திருட்டு

சிதம்பரத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் கேமராக்கள் திருடு போனது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:24 PM
பகிர்:

சிதம்பரத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் கேமராக்கள் திருடு போனது.

சிதம்பரம் அண்ணாமலைநகர் சக்கரா அவென்யூவைச் சேர்ந்தவர் ரகு. இவர் சிதம்பரம் கமலீஸ்வரன் கோயில் தெருவில் கஸ்டமர்ஷாப் என்ற கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றவர் வியாழக்கிழமை காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திருடு போனது தெரியவந்தது. கடையில் இருந்த சாம்சங் கேலக்சி, மைக்ரோமேக் ஆகிய நிறுவனத்தைச் சேர்ந்த விலையுயர்ந்த செல்போன்கள் 20, சோனி வீடியோ கேமராக்கள் 6 ஆகியவை திருடுபோனது தெரியவந்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே சென்ற ஆண்டு இவரது கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருடு போனது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்திற்கு சிதம்பரம் டிஎஸ்பி ராஜாராம் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.