தற்போதைய செய்திகள்

நகை நிதி நிறுவனத்தில் புகுந்து மேலாளரை வெட்டி நகைகளைக் கொள்ளை அடித்து மர்ம நபர்கள் கைவரிசை

மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரில் உள்ளது ஹரிஹரா பைனான்ஸ் என்ற தனியார் நகைக்கடை. இதன் மேலாளராக உள்ளார் துரைப்பாண்டி

ஜெயப்பாண்டி

மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரில் உள்ளது ஹரிஹரா பைனான்ஸ் என்ற தனியார் நகைக்கடை. இதன் மேலாளராக உள்ளார் துரைப்பாண்டி (45). இன்று பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பைனான்ஸ் நிறுவனத்துக்குள் புகுந்தனர். தாங்கள் நகை அடகு வைக்க வந்துள்ளதாகக் கூறியுள்ளனர். ஆனால், துரைப்பாண்டி புதிய நபர்களின் நகைகளை அடகுக்கு எடுப்பதில்லை என்று கூறியுள்ளார். இதை அடுத்து, மேலாளரின் கையை துணியால் கட்டி, வாயில் துணியை அடைத்து, பீரோவைத் திறந்து நகைகளைக் கொள்ளை அடித்து, மேலாளரை சரமாரியாக வெட்டிவிட்டுச் சென்றனர்.

பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தக் கொள்ளை சம்பவத்தில் நூற்றுக்கணக்கான பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு சுமார் 50 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

காயம் அடைந்த துரைப்பாண்டியிடம் மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சம்ந்த் ரோஹன் ராஜேந்திரா விசாரணை நடத்தினார். சம்பவ இடத்தை ஐ.ஜி. அபய்குமார் சிங் பார்வையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT