முகப்பு
தற்போதைய செய்திகள்

மானாமதுரை அருகே வேன் மோதி பைக்கில் சென்றவர் சாவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேன் மோதி பைக்கில் சென்றவர் இறந்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:25 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேன் மோதி பைக்கில் சென்றவர் இறந்தார்.

மானாமதுரை பாகபத் அக்ராஹாரம் தெருவைச் சேர்ந்தவர் மணிவாசகம்(29) இவர் பைக்கில் மதுரை-ராமேஸ்வரம் சாலையில் வந்து கொண்டிருந்தார். சங்கமங்கலம் என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக வந்த வேன் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணிவாசகம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.