தற்போதைய செய்திகள்

"இந்து என்றால் திருடன்" என்ற அவதூறுப் பேச்சுக்கு கருணாநிதி பதில் மனு

தினமணி

இந்து என்றால் திருடன் என்று கடந்த 2002-ம் ஆண்டு கருணாநிதி அவதூறாகப் பேசியதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதமாற்ற தடை சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்த புதிதில், இந்த சட்டத்தை தொடர்ந்து எழும்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் சிறுபான்மை அமைப்பு கண்டன பொதுக்கூட்டத்தில், கலந்து கொண்டார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அப்போது அவர், இந்து என்றால் திருடன் என்று பொருள்பட ஒரு மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அவதூறாகப் பேசினார். இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி மீது சென்னை மாம்பலம் போலீசில் கௌதமன் என்பவர் புகார் அளித்தார். ஆனால், இந்த புகாரின் பேரில் 2002-ம் ஆண்டு மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் என்றாலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து சென்னை  உயர்நீதிமன்றத்தில் கௌதமன்  ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது தான் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மாம்பலம் போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதை அடுத்து கருணாநிதிக்கு விளக்கம் கேட்டு பதிலளிக்கும் படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நோட்டீஸுக்கு பதில் அளிக்கும் விதமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில்,

நான் 5 முறை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஈடுபட்டு வருகிறேன். வி.பி.சிங், தேவேகவுடா, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களுடன் தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ளேன்.

பத்திரிக்கையில் வந்த செய்தி அடிப்படையில் கௌதமன் என் மீது கிரிமினல் புகார் கொடுத்துள்ளார். நான் பேசியதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் சுயவிளம்பரத்துக்காகவும், உள்நோக்கத்தோடும் என் மீது புகார் கொடுத்துள்ளார். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்.

- என்று கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி சசிதரன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இருப்பினும், இவ்வாறு அவதூறாகப் பேசிய மறுநாளே பத்திரிகைகளில் தான் சொன்னதை நிரூபிப்பதற்காக சில மேற்கோள்களை சுட்டிக் காட்டி விளம்பரமே கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2002 அக் 25ம் தேதி அன்றைய தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்த செய்திகள் இவை:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT