முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவியை உடன் அனுப்ப மறுத்த மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்

குடும்பத் தகராறு காரணமாகப் பிரிந்து தந்தை வீட்டில் வாழ்ந்து வந்த மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்த மாமனாரை அடித்துக் கொன்றார் மருமகன்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:27 PM
பகிர்:

குடும்பத் தகராறு காரணமாகப் பிரிந்து தந்தை வீட்டில் வாழ்ந்து வந்த மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்த மாமனாரை அடித்துக் கொன்றார் மருமகன்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருக்களார் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் கீதா (35). அதே கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி என்ற ரஜினி(40)க்கு கீதாவைத் திருமணம் செய்து கொடுத்துள்ளார் சிதம்பரம். இவர்களுக்கு திருமணமாகி 15 வருடம் ஆகிறது. ஒரு மகன் ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர்.

அடிக்கடி இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், கீதா கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி மாமனார் சிதம்பரம் வீட்டுக்குச் சென்ற முனியாண்டி, மனைவியைத் தன் வீட்டுக்கு குடும்பம் நடத்த வருமாறு அழைத்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் முனியாண்டி அவர் சகோதரர் பாக்கியராஜ் இருவரும் சிதம்பரத்தைக் கட்டையால் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று காலை உயிரிழந்தார். இந்தத் தாக்குதலின் போது கீதாவுக்கும் காயம் ஏற்பட்டது. அவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து எடையூர் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →