தற்போதைய செய்திகள்

மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்கள் பரிந்துரை 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் வேலையளிப்போருக்கு இணையதளத்தின் வாயிலாக பதிவுதாரர்கள் பரிந்துரைக்கப்படுவது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது,

எஸ். பாண்டியன்

சென்னை தமிழ்நாடு மின்சார உற்பத்தி கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்காலியிடத்திற்கு தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் மாநில அளவில் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் வேலையளிப்போருக்கு இணையதளத்தின் வாயிலாக பதிவுதாரர்கள் பரிந்துரைக்கப்படுவது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது, சென்னை தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்தின் தலைமைப் பொறியாளர் மூலம் விரைவில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்காலியிடத்திற்கு மாநில அளவில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினரால் பரிந்துரைக்கப்பட இருக்கிறது.

அதனால், குறிப்பிட்ட கல்வித் தகுதியுடையவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு பதிவினை www.tnvelaivaippu.gov.in என்ற இணைய தளம் வழியாக தாங்கள் வசிக்கும் இருப்பிடத்திறஅகு அருகாமையிலுள்ள இணையதளத்தின் மையத்திலோ அல்லது தனது கைப்பேசியின் இணைய தள வசதியினை பயன்படுத்தி தங்களது வேலைவாய்ப்பு அட்டையினை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம். அதில், ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் வேலைவாய்ப்பு பதிவு அட்டை, சாதி மற்றும் கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை வருகிற 28-ம் தேதி நேரி்ல் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

மேலும், குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகின்றவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், இதற்கான பதிவு மூப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT