முகப்பு
தற்போதைய செய்திகள்

சாக்கடை நீர் சாலையில்: தென்காசி அருகே கடையடைப்பு

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே இடைகால் கிராமத்தில், தேசியநெடுஞ்சாலையில் அருகே அமைக்கப்பட்டுள்ள சாக்கடை நீர் குடியிருப்புக்குள் புகுந்து தொல்லை ஏற்படுவதால், பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:29 PM
பகிர்:

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே இடைகால் கிராமத்தில், தேசியநெடுஞ்சாலையில் அருகே அமைக்கப்பட்டுள்ள சாக்கடை நீர் குடியிருப்புக்குள் புகுந்து தொல்லை ஏற்படுவதால், பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இடைகல் பேருந்து நிறுத்தம் அருகே மாறுகால் வசதி செய்ய முடியாததால் சாக்கடை நீர் தேங்குகிறது. இது, மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை என்பதால், தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற வேண்டியுள்ளது. சாலையைக் கடந்து நீர்வழிக் கால்வாய் அமைக்க பொதுமக்கள் போராடி அனுமதி கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் இன்று கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் குத்தாலிங்க முதலியார் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில்,60க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →