நிவாரணப் பணிகளை காங்கிரஸ் அரசியலாக்குகிறது: வெங்கய்ய நாயுடு
கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நிவாரணப் பணிகளைப்
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை காங்கிரஸ் கட்சி அரசியாக்கி வருவதாக பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு குற்றம்சாட்டினார்.இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நிவாரணப் பணிகளைப் பார்வையிட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் சென்றதை காங்கிரஸ் எதிர்க்கிறது. இது என்ன காங்கிரசுக்கு சொந்தமான நாடா?நிவாரணப் பணிகளைக் கூட காங்கிரஸ் அரசியலாக்கி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயலற்றத் தன்மையால் நாட்டின் வளர்ச்சி குறைந்துகொண்டே வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால், யாரும் கவலைப்பட வேண்டாம் என நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் அண்டை நாடுகளுடன் நல்லுறவு இல்லை. பயங்கரவாதச் செயல்கள் அன்றாட நிகழ்வுகளாகி விட்டது. காஷ்மீரில் 8 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், அரசு கண்டனம் தெரிவிப்பதோடு நின்றுவிடுகிறது. இதனால் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு சரிந்துவிட்டது என்றார் வெங்கய்ய நாயுடு.
Advertisement