தற்போதைய செய்திகள்

ஆம்பூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பை பிடித்த பொதுமக்கள்

ஆம்பூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பை சனிக்கிழமை காலை பொதுமக்கள் பிடித்தனர்.

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பை சனிக்கிழமை காலை பொதுமக்கள் பிடித்தனர்.

ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் உள்ள ஒரு வாழைத்தோப்புக்கு அருகிலிருந்த நிலத்தில் மலைப்பாம்பு இருந்துள்ளது.  சனிக்கிழமை காலையில் அவ்வழியாக சென்ற அவ்வூர் மக்கள் பார்த்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் போராடி 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து கோணிப்பைக்குள் அடைத்தனர்.  இதுகுறித்து ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அளித்து 2 மணி நேரம் கழித்து வந்த வனத்துறையினர் அதனை கொண்டு சென்று அருகிலிருந்த காட்டில் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT