முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் பகுதியில் வாகனங்களில் செல்பவர்களை தாக்கி வழிபறியில் ஈடுபட்ட இரு வாலிபர்கள் கைது

சிதம்பரம் பகுதியில் வாகனங்களில் செல்பவர்களை தாக்கி வழிபறியில் ஈடுபட்ட இரு வாலிபர்களை பரங்கிப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். மேலும் இருசம்பவங்கள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:39 AM
பகிர்:

சிதம்பரம் பகுதியில் வாகனங்களில் செல்பவர்களை தாக்கி வழிபறியில் ஈடுபட்ட இரு வாலிபர்களை பரங்கிப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். மேலும் இருசம்பவங்கள் தொடர்பாக அவர்களிடமிருந்து 16 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலிபுல்லா மற்றும் போலீஸார்  நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு சம்பந்தம் எனுமிடத்தில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மஞ்சக்குழியைச் சேர்ந்த கார்த்திக் (23), பி.முட்லூர் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெகதீசன் (23) ஆகிய இரு வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேற்கண்ட இருவரும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை பின்தொடர்ந்து சென்று மறித்து தாக்கி வழிபறி செய்தது தெரிய வந்தது.

விசாரணையில் புதுச்சேரியைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் தனது மனைவியுடம் கடந்த 1-7-2012 அன்று மோட்டார் சைக்கிளில் பி.முட்லூரிலிருந்து புதுச்சேரிக்கு சென்றுள்ளார். அப்போது கொத்தட்டை எனுமிடத்தில் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த வாலிபர்கள் வழிமறித்து தனசேகரன் மனைவியிடம் 9 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதே போன்று சிதம்பரம் உமையாள்சந்தில் ராஜலட்சுமி அம்மாளிடம் குடிக்க தண்ணீர் கேட்டு வீட்டிற்குள் புகுந்த ஏழரை பவுன் நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கண்ட இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 16 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →