சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் : 200 பேர் கைது
சிவகங்கையில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கையில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை ரயில் நிலையத்துக்கு வந்த சிவகங்கை இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குணசேகரன் தலைமையிலான கட்சியினர், அங்கு வந்த திருச்சி - ராமேஸ்வரம் பயணிகள் ரயிலை மறிக்க முயன்றனர். அங்கு வந்த காவல்துறையினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 200க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
பல்லவன் விரைவு ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வலியுறுத்தி இந்த ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதேக் கோரிக்கையை வலியுறுத்தி சிவங்கை மற்றும் மானாமதுரையில் ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.