தூத்துக்குடி அருகே பால் வியாபாரி விபத்தில் சாவு
தூத்துக்குடி வடக்கு சங்கரப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (37). பால் வியாபாரி. இவர், தனது மோட்டார் சைக்கிளில் பால் கேனுடன் தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பால் வியாபாரி அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.
தூத்துக்குடி வடக்கு சங்கரப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (37). பால் வியாபாரி. இவர், தனது மோட்டார் சைக்கிளில் பால் கேனுடன் தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். தனியார் கல்லூரி அருகே அவர் சென்ற போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.