முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் விடிய விடிய மழை: நீரில் மிதக்கும் நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 2 வது நாளாக மழை பெய்து வருகிறது.  நேற்று(செவ்வாய்க்கிழமை)

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:43 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்தது.இன்று பகலிலும் மழை நீடித்ததால் அறுவடை செய்யும் பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மிதக்கின்றன. இதனால் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 2 வது நாளாக மழை பெய்து வருகிறது.  நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இன்று பகலிலும் மழை நீடித்தது.தற்போது மழை பெய்து வருவதால் அணைகள் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னை எழாத வகையில் சமாளிக்க முடியும். அதே சமயம் அறுவடை செய்யும் பருவத்தில் மழை பெய்து வருவதால் நெல்லினை கரை சேர்க்கமுடியாத நிலை உருவாகியுள்ளது.

அம்பாசமுத்திரம் வட்டத்தில் கன்னடியன்கால்வாய், வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய் பாசனத்தில் அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி,வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, முக்கூடல், கடையம் பகுதியில் ஒருசில இடங்களில் அறுவடை முடிந்து விட்டன.தாமதமாக நடவு செய்த இடங்களில் இன்னும் ஒரு சில தினங்களில் அறுவடைசெய்யும் பருவத்தில் உள்ளது. இந்த சூழலில் மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் நீரில் மிதக்கின்றன. விவசாயிகள் வயலில் தேங்கியுள்ள நீரினை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை நீடித்தால் நெல் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →