சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா நாளை (மார்ச் 10) தொடக்கம்
தொடக்க விழாவிற்கு யு.ஆர்.உமாநாத தீட்சிதர் தலைமை வகிக்கிறார். பொது தீட்சிதர்களின் செயலாளர் ஏ.ஆனந்ததாண்டவ தீட்சிதர் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு அரசு கலை மற்றும் கலாசார துறை ஆணையர் எஸ்.எஸ்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடனக் கலைஞர்கள் தங்களது நாட்டியத்தை ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவான 32-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மகாசிவராத்திரியான நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்குகிறது. நாட்டியாஞ்சலி விழா தொடர்ந்து மார்ச்.14-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
தொடக்க விழாவிற்கு யு.ஆர்.உமாநாத தீட்சிதர் தலைமை வகிக்கிறார். பொது தீட்சிதர்களின் செயலாளர் ஏ.ஆனந்ததாண்டவ தீட்சிதர் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு அரசு கலை மற்றும் கலாசார துறை ஆணையர் எஸ்.எஸ்.ஜவகர் நாட்டியாஞ்சலியை தொடங்கி வைத்துப் பேசுகிறார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தலைவர் பி.சுரேந்திர்மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறார். பிரேவியா கேப்பிட்டல் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் தலைவர் பாரத்பிஷ், யு.எஸ்.ஏ நியுயார்க் தமிழ்ச் சங்கம் தலைவர் பிரகாஷ் எம்.சுவாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றுகின்றனர்.
நாட்டியாஞ்சலியில் இன்று ( மாலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை): புதுச்சேரி தானியா கனக மகாலட்சுமி, மயிலாடுதுறை உமாமகேஸ்வரி, தஞ்சாவூர் சாருமதி சந்திரசேகரன், அண்ணாமலைப் பல்கலைக்கழக இசை மற்றும் நாட்டியத்துறை மாணவர்கள், யுஎஸ்ஏவைச் சேர்ந்த ஸ்வாதி பிசே, சென்னை கவிதாராமு ஆகியோரின் பரதம், ஹைதராபாத் மிகிராபாதுரி கூச்சுப்புடி நடனம், புதுதில்லி ரஞ்சனா கெளஹார் ஓடிஸி நடனம், பெங்களூரு ருக்குமணி விஜயகுமாரின் பரதம், சென்னை டாக்டர் வி.ராகவன் நிகழ்கலை மையம் வழங்கும் சிவ ஆனந்த யோகம் என்ற பரதம், யுஎஸ்ஏ மைதிலிகுமார், ரசிகா குமார், சென்னை சுதாராணி ரகுபதி மாணவியர் வழங்கும் கருத்தாண்டவர் என்ற பரதம், மஸ்கட்டைச் சேர்ந்த பத்மினி கிருஷ்ணமூர்த்தி, மும்பை பண்டிட் நரேஷ்பிள்ளை, சேலம் ரமாதேவி மாணவியர்கள், சென்னை கற்பகவல்லி ஜெயக்குமார், திருவனந்தபுரம் சஞ்சனாஅருண், சென்னை ராதிகா கல்யாணி, பெங்களூர் பூர்ணிமா நவீன்குமார், சென்னை நிருத்யதாரா மாணவியர்கள்.
விழா ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன், துணைத் தலைவர்கள் கே.சுவாமிநாதன், வி.எஸ்.ராமலிங்கம், செயலாளர்கள் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம், ஆர்.நாகசாமி, இணைச் செயலாளர் ஆர்.நடராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.ராமநாதன், உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துகுமரன், வி.பாலதண்டாயுதம், ஆர்.சபாநாயகம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.