ஏரிக்கு மீன் பிடிக்க சென்ற சிறுமிகள் 2 பேர் பலி
சங்கராபுரம் அருகே ஏரியில் மின் பிடிக்கச் சென்ற சிறுமிகள் இருவர் தண்ணீரில் மூழ்கி பலியாயினர்.
சங்கராபுரம் அருகே ஏரியில் மின் பிடிக்கச் சென்ற சிறுமிகள் இருவர் தண்ணீரில் மூழ்கி பலியாயினர்.
சங்கராபுரம் ரெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவரின் மகள்கள் கனிமொழி (12), பிரியதர்ஷினி (10). இருவரும் ஊருக்கு மேற்கே உள்ள ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
வடபொன்பரப்பி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களைக் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.