முகப்பு
தற்போதைய செய்திகள்

விவசாயிகளின் எதிர்ப்புக்கிடையே ஈரோட்டில் புதிய மஞ்சள் சந்தை திறப்பு

ஈரோட்டில் விவசாயிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே புதிய மஞ்சள் சந்தை திறக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:49 AM
பகிர்:

ஈரோட்டில் விவசாயிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே புதிய மஞ்சள் சந்தை திறக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் வியாபாரிகள் மற்றும் வர்த்தக முகமைகள் இணைந்து ஈரோடு செம்மம்பாளையத்தில் மஞ்சள் மண்டி மற்றும் மஞ்சள் சந்தை திறக்க ஏற்பாடு செய்தனர். இந்தப் பகுதியின் மிகப் பெரும் மஞ்சள் சந்தையான ஈரோடு சந்தையை மழுங்கடிக்கும் நோக்கத்துடனும், வியாபாரிகளின் சுயலாபத்துக்காகவும் இந்த முயற்சி நடப்பதாகக் கூறி விவசாயிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டிருந்தது. இதில் நீதிமன்றம் நேற்றுதான் இதற்குத் தடை விதித்தது. இந்நிலையில் இன்று காலை அவசரம் அவசரமாக ஈரோட்டில் செம்மம்பாளையத்தில் மஞ்சள் சந்தை இயங்கும் என்று கூறி திறக்கப்பட்டுள்ளது விவசாயிகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.