உதவி ஆட்சியர் பேச்சு : அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதம் வாபஸ்
சிதம்பரம் உதவி ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட வந்த உண்ணாவிரதப் போராட்டம் 6வது நாளான இன்று மாலை 4.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.
சிதம்பரம் உதவி ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட வந்த உண்ணாவிரதப் போராட்டம் 6வது நாளான இன்று மாலை 4.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 33 பேர் பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் அருகே இன்றோடு தொடர்ந்து 6வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், சிதம்பரம் உதவி ஆட்சியர் சுப்ரமணியம், வட்டாட்சியர் தனசிங், ஏஎஸ்பி எம். துரை, பல்கலைக்கழக கலை புல முதல்வர் செல்வராஜ், உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்தவர்களுடன் பேசி, உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, உதவி ஆட்சியர் , மாணவர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
Advertisement
போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சேவை கண்டித்தும், ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் ராஜபட்சே மீது சர்வதேச விசாரணை நடத்த தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் மாணவர்கள் கடந்த திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து 6-ம் நாளாக இன்று சனிக்கிழமை மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.