முகப்பு
தற்போதைய செய்திகள்

வேன் கவிழ்ந்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் காயம்

அழகர்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 15 பேர் காயமடைந்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:52 AM
பகிர்:

அழகர்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 15 பேர் காயமடைந்தனர்.

அழகர்கோவில் மேலூர் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சாலையில் நின்றிருந்த அக்கல்லூரிகளின் மாணவர்கள், அவ்வழியாக வந்த  மினி வேனில் மேலூருக்குச் சென்றனராம்.

அப்போது எதிர்பாராத விதமாக வேன் சக்கரம் கழன்றதில் வாகனம் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பயணம் செய்த 15 பேர் காயமடைந்தனர்.

மேலூர் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து மேலவளவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →