உணவு தரமில்லை : அரசு நந்தனார் பள்ளி மாணவர்கள் போராட்டம்
உணவு தரமாக இல்லை என்றும், உணவுப் பொருள்கள் களவாடப்பட்டுள்ளதை கண்டித்து சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உணவு தரமாக இல்லை என்றும், அரிசி, உளுந்து உள்ளிட்ட உணவுப் பொருள்கள் களவாடப்பட்டுள்ளதை கண்டித்து சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை காலை உணவு சாப்பிடாமல் பள்ளி வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் கடந்த ஒன்றரை வருடங்களாக பட்டியலில் உள்ள இட்லி வழங்கப்படுவதில்லை என்றும், அதற்குண்டான ரேஷன் அரிசி, உளுந்து ஆகியவை களவாடப்பட்டுள்ளது என்றும், முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி விடுதி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை காலை உணவு சாப்பிடாமல் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஆதிதிராவிடநலத்துறை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இட்லி வழங்கப்படாதது குறித்தும், அரிசி, உளுந்து திருடு போனது குறித்து விசாரணை நடத்த கமிட்டி ஒன்று அமைத்து நடவடிக்கை எடுப்பதாகவும், புதன்கிழமை முதல் பட்டயலில் உள்ளப்படி உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று விடுதிக்கு திரும்பினர்.
Advertisement