தற்போதைய செய்திகள்

பெண் சிசுக்கொலை : அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு குழு அமைக்க திட்டம்

பெண் சிசுக்கொலையை தடுக்க அங்கன்வாடி மையங்கள் நிலையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது மத்திய அரசின் பஞ்சாயத்துராஜ்துறை கூடுதல் செயலர் ரிஷிகேஷ்பாண்டே தெரிவித்தார்.

பெ. விஜயபாஸ்கர்

பெண் சிசுக்கொலையை தடுக்க அங்கன்வாடி மையங்கள் நிலையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது மத்திய அரசின் பஞ்சாயத்துராஜ்துறை கூடுதல் செயலர் ரிஷிகேஷ்பாண்டே தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாலின விகிதம் குறித்து மத்திய அரசின் பஞ்சாயத்துராஜ் துறை கூடுதல் செயலர் ரிஷிகேஷ்பாண்டே, கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் அண்மையில் ஆலோசனை நடத்தினார்.  இதைத்தொடர்ந்து உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் பெண் சிசு, கருக்கொலையை தவிர்ப்பது பெண் குழந்தைகளை பாதுகாத்தல், பாலின விவரம் குறித்த பயிலரங்கம் கடலூர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற்றது.   இதில் கூடுதல் செயலர் ரிஷிகேஷ் பாண்டே ஊராட்சியின் செயல்பாடுகள், அங்கன்வாடி மையத்தில் கண்காணிப்பு குழு அமைப்பதன் அவசியம், மகளிர் சபை ஏற்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி பேசினார்.

மேலும் கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிவிக்கும் பரிசோதனை மற்றும் பெண் கருவினை அழித்தல் ஆகியவற்றை தூண்டுபவர் குறித்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிப்பது, இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள் மீது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடுமையாக எச்சரித்தார்.

இதுகிறித்து கிராம அளவில், கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நாள் அன்று பெண் குழந்தைகளின் பாலின விகிதம் மற்றும் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு பணிகளை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என ரிஷிகேஷ் பாண்டே கேட்டுக்கொண்டார். நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படக்கூடிய விழிப்புணர்வு, மனமாற்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், மகளிர் குழுக்கள் மூலம் மேற்கொண்ட நிலையினை மாற்ற இயலும் என அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT