முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்: நிவாரணத் தொகை வழங்கியதால் போராட்டம் வாபஸ்

சிதம்பரம் அருகே உள்ள மேலமூங்கிலடி கிராமத்தில் 169 பேருக்கு வறட்சி நிவாரணத் தொகை வழங்க வேளாண் அதிகாரிகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் டோக்கன் வழங்கி ஒரு மாதமாகியும் கீரப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் தரவில்லை. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:54 AM
பகிர்:

சிதம்பரம் அருகே கீரப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு வறட்சி நிவாரணத் தொகை பெற டோக்கன் வழங்கியும் கடந்த ஒரு மாதமாக நிவாரணத் தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அருகே உள்ள மேலமூங்கிலடி கிராமத்தில் 169 பேருக்கு வறட்சி நிவாரணத் தொகை வழங்க வேளாண் அதிகாரிகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் டோக்கன் வழங்கி ஒரு மாதமாகியும் கீரப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் தரவில்லை. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புவனகிரி ஒன்றிய செயலாளரும், மேலமூங்கிலடி ஊராட்சி மன்றத் தலைவருமான சாதனந்தம் தலைமையில் விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைமறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவானந்தம், கூட்டுறவு வங்கி செயலர் செந்தில்குமார் மற்றும் போலீஸார் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை உடனடியாக வழங்குவதாக தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்று, வங்கிக்கு சென்று நிவாரணத்தொகையை பெற்றுச் சென்றனர். போராட்டத்திற்கு பின்னர் மேலமூங்கிலடி கிராம விவசாயிகள் 161 பேருக்கு, ரூ.21 லட்சத்து 49,950 தொகை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →