முகப்பு
தற்போதைய செய்திகள்

நடராஜர் கோயிலில், ரேஸ் காருக்கு சிறப்பு பூஜை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் மெக்கானிக் என்ஜீனியரிங் பயிலும் கேப்டன் அமீத்குமார், துணை கேப்டன் ராகுல்துபே தலைமையிலான மாணவர்கள் 15 பேர் கொண்ட

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:55 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள், தாங்கள் கண்டுபிடித்த ரேஸ் காரை ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு கொண்டு வந்து சிறப்பு பூஜை செய்தனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் மெக்கானிக் என்ஜீனியரிங் பயிலும் கேப்டன் அமீத்குமார், துணை கேப்டன் ராகுல்துபே தலைமையிலான மாணவர்கள் 15 பேர் கொண்ட குழுவினர் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி மோட்டாக்கிள் ர் சைஎன்ஜினை கொண்டு சிறிய ரேஸ் காரை வடிவமைத்து தயாரித்துள்ளனர்.இந்த காருக்கு இன்டர்நேஷனல் கோ கார் என பெயர் வைத்துள்ளனர். இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 30 கி.மீ. தூரம் செல்லும். காரின் வேகம் 80 கி.மீட்டராகும்.

பல்கலைக்கழக மாணவர்கள், சனிக்கிழமை தாங்கள் வடிவமைத்த ரேஸ் காரை ஓட்டிக் கொண்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வந்தனர்.கீழசன்னதியில் கோபுர வாயிலில் காரை நிறுத்தி கழுவி, அதற்கு மாலையிட்டு, ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து, சிறப்பு பூஜை செய்தனர்.

புதிய வடிவமைப்பிலான ரேஸ் காரை கோயிலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் வியப்புடன் பார்த்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →