முகப்பு
தற்போதைய செய்திகள்

பெ.நா.பாளையம் அருகே வியாபாரியிடம் ரூ.3 லட்சம் கொள்ளை

கோயமுத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த  வியாபாரியின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி ரூ. 3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

Updated On : 23 மார்ச், 2013 at 1:08 PM
பகிர்:

கோயமுத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த  வியாபாரியின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி ரூ. 3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடையைச் சேர்ந்தவர் குமாரவேல். எலுமிச்சம்பழ வியாபாரியான இவர் தனது மனைவி கமலாமணியுடன் காய்கறிச் சந்தைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர்கள், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே சென்றபோது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஆம்னி வேனில் இருந்து இறங்கியவர்கள், இவர்களது பைக்கை மறித்தனர். அவர்கள் இருவரின் கண்களில் மிளகாய்ப்பொடியைத் தூவி அவர்கள் வைத்திருந்த ரூ, 3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.