முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவை அருகே தேமுதிகவினர் சாலைமறியல்

கோவை மாவட்டம் பெரியநாயக்கம்பாளையம் தொப்பம்பட்டி பிரிவில், தேமுதிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:58 AM
பகிர்:

கோவை மாவட்டம் பெரியநாயக்கம்பாளையம் தொப்பம்பட்டி பிரிவில், தேமுதிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நேற்று தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல இடங்களில் தேமுதிகவினர் இன்று சாலை மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை கோவை மேட்டுப்பாளையம் சாலையில் தொப்பம்பட்டி பிரிவில், 2 பெண்கள் உள்பட சுமார் 60 பேர் சாலைமறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.