கோவை துடியலூர் அருகே எலும்புத் துண்டில் விஷம் வைத்து நாய்கள் கொலை
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே துடியலூர்- திப்பனூர் பகுதியில் இன்று காலை 20க்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் வீடுகளின் முன் உயிரிழந்து கிடந்தன. அதை அடுத்து காக்கைகள், கோழிகள் சிலவும்
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே துடியலூர்- திப்பனூர் பகுதியில் இன்று காலை 20க்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் வீடுகளின் முன் உயிரிழந்து கிடந்தன. அதை அடுத்து காக்கைகள், கோழிகள் சிலவும் உயிரிழந்து கிடந்தன.
அந்தப் பகுதியில் விஷமிகள் சிலர், எலும்புத்துண்டுகளில் விஷம் வைத்து இவற்றைக் கொலை செய்துள்ளதாகத் தெரியவந்தது. ஆங்காங்கே எலும்புத் துண்டுகள் சிதறிக் கிடந்தன. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.