முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை!

கிள்ளை தைக்கால் பகுதியைச் சேர்ந்த அன்புராஜ். இவரது மனைவி பரிமளா (25). கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக கடந்த மூன்று தினங்கள் முன்பு கிள்ளை ஆரம்ப

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:59 AM
பகிர்:

சிதம்பரம் அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்தது.

கிள்ளை தைக்கால் பகுதியைச் சேர்ந்த அன்புராஜ். இவரது மனைவி பரிமளா (25). கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக கடந்த மூன்று தினங்கள் முன்பு கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். இன்று பிரசவவலி அதிகரித்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் பரிமளா சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது கீழச்சாவடி அருகே ஆம்புலன்ஸிலேயே பரிமளாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பாலாஜி, டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் குழந்தையுடன், பரிமளாவை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். மருத்துவமனையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →