தற்போதைய செய்திகள்

கர்நாடக பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பிரகாசமான வாய்ப்பு: ஈஸ்வரப்பா

கர்நாடகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று கூறினார் பாஜக தலைவர் ஈஸ்வரப்பா.

ஜெயப்பாண்டி

கர்நாடகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று கூறினார் பாஜக தலைவர் ஈஸ்வரப்பா.

மதுரை வந்திருந்த கர்நாடக துணை முதல்வர் ஈஸ்வரப்பா செய்தியாளர்களிடம் பேசியபோது

காவிரி விவகாரம் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்காது.

எடியூரப்பாவாலும், காவிரி விவகாரத்தாலும் பாஜகவுக்கு பெரிய பாதிப்பு இருக்காது.

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்படவில்லை.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் நிச்சயம் பாஜகவில் இருந்து ஓரங்கட்டுப் படுவார்கள், கட்சியின் தூய்மையைக் காப்போம்.

மத்திய அரசு காவிரி விவகாரத்தை வைத்து விளையாடி வரும் அரசியல் துரோகங்களை கர்நாடக மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

தமிழகத்துக்கு காவிரியில் உரிய தண்ணீர்ப் பங்கை சரியாகவே கர்நாடகம் அளித்து வருகிறது. ஆனால், காவிரியில் நீர் இல்லாமல் போகும்போதுதான் பிரச்னை எழுகிறது.

- என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT