மணல் லாரி மோதி வாலிபர் பலி
விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸலார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சுங்குவார்சத்திரம் அருகே சாலையை கடக்க முயன்ற மோட்டார்சைக்கிள் மீது மணல் லாரி மோதியதில் மோட்டார்சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சுங்குவார்சத்திரம் அடுத்த திருமங்கலம் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் ரஙகப்பா(34) இவர் இன்று காலை தனது மோட்டார்சைக்கிளில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் புறவழிச்சாலையை தனது மோட்டார்சைக்கிளில் கடக்க முயன்றுள்ளார். அப்போது காஞ்சிபுரம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த மணல் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த ரங்கப்பா சம்பவ இட்ததிலேயே பலியானார்.
விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸலார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.