தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி: வறட்சி நிவாரணம் பெற தகுதியுடைய விவசாயிகளுக்கு அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட உள்ளதால் அவர்கள் கிராம நிர்வாக

தி. இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட உள்ளதால் அவர்கள் கிராம நிர்வாக அலுவலரை அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டதன் அடிப்படையில் நிதியமைச்சர் தலைமையில் உயர்மட்டக்குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். இதனால் நிவாரணம் வழங்க அரசு ஆணை வெளியிடப்பட்டது.

 அதன்படி 50 சதவிகிதத்துக்கு மேல் நெற்பயிர் மகசூல் இழப்பு ஏற்பட்டு உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகையும், பாசன ஆதாரம் உள்ள நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் 50 சதவிகிதத்துக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டு உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணத் தொகையும், மானாவாரி சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் 50 சதவிகிதத்துக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரமும் நிவாரணத்தொகை வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

 இந்த நிவாரணத் தொகை பாதிப்படைந்த விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்த அரசு உத்தரவு வழங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் தங்கள் வேளாண்மை தொடக்க கூட்டுறவு வங்கி எண் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள கணக்கு எண்ணை உடனடியாக அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் தகுந்த ஆதாரங்களுடன் ஒப்படைக்க வேண்டும்.

 மேலும்,  வங்கி கணக்கு இல்லாத விவசாயிகள் உடனடியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் புதிய கணக்கு தொடங்கி அந்த எண்ணை கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT