முகப்பு
தற்போதைய செய்திகள்

கார் மோதி, சிதம்பரத்தில் நடைபயற்சி சென்ற பெண் சாவு: மற்றொரு பெண் காயம்

சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சீனுவாசன் மனைவி அம்பிகா (50). இவரும் அதே தெருவைச் சேர்ந்த கலைவாணி (35) ஆகிய இருவரும் தினமும் புறவழிச்சாலையில் நடைபயற்சி செல்வது வழக்கம். இன்று

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:35 AM
பகிர்:

சிதம்பரம் புறவழிச்சாலையில் சாலையோரம் நடைபயிற்சி சென்ற பெண்கள் மீது கார் மோதியது. இவ்விபத்தில் ஒரு பெண்மணி இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சீனுவாசன் மனைவி அம்பிகா (50). இவரும் அதே தெருவைச் சேர்ந்த கலைவாணி (35) ஆகிய இருவரும் தினமும் புறவழிச்சாலையில் நடைபயற்சி செல்வது வழக்கம். இன்று அதிகாலை புறவழிச்சாலையில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து திருத்துறைபூண்டி நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அப்பெண்கள் மீது மோதியது. இவ்விபத்தில் அம்பிகா படுகாயமுற்று இறந்தார். மற்றொருவரான கலைவாணி காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த உரிமையாளர் புதுச்சேரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →