முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் மேலும் இரு பேருந்துகள் கண்ணாடி உடைப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரம் பகுதியில் பேருந்துகளின் கண்ணாடிகளை கல்வீசி தாக்கி உடைக்கப்படும் சம்பவம் தொடருவதால் பயணிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் பகல்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:35 AM
பகிர்:

சிதம்பரம் பகுதியில் பகுதியில் மேலும் இரு பேருந்துகள் கண்ணாடி கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது. பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு சம்பவம் தொடர்வதால் பயணிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரம் பகுதியில் பேருந்துகளின் கண்ணாடிகளை கல்வீசி தாக்கி உடைக்கப்படும் சம்பவம் தொடருவதால் பயணிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் பகல் வேளையில் மட்டும் இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே உள்ளது. இன்று சிதம்பரம் அருகே புவனகிரியை அடுத்த பு.உடையூர் எனுமிடத்தில் வேளாங்கண்ணி நோக்கி சென்ற அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அதுபோன்று புவனகிரி ஆதிவராகநல்லூர் அருகே சிதம்பரம்-கடலூர் செல்லும் அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுகுறித்து புவனகிரி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே  நேற்று(வியாழக்கிழமை) இரவிலிருந்து இன்று மதியம் வரை 3 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்போது மேலும் இரு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →