முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் மூன்று பேருந்துகள் கண்ணாடி உடைப்பு!

சிதம்பரம் வடக்குமெயின் ரோட்டு கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக டெப்பா அருகே இன்று மதியம் கும்பகோணம்-சிதம்பரம் வந்த அரசு பேருந்தின் முன்புற கண்ணாடி மர்மஆசாமிகளால் கல்வீசி உடைக்கப்பட்டது. சிதம்பரம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:35 AM
பகிர்:

பாமக நிறுவனர் டாமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்த சிதம்பரம் பகுதியில் மூன்று பேருந்துகள் கண்ணாடி உடைக்கப்பட்டது.

சிதம்பரம் வடக்குமெயின் ரோட்டு கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக டெப்பா அருகே இன்று மதியம் கும்பகோணம்-சிதம்பரம் வந்த அரசு பேருந்தின் முன்புற கண்ணாடி மர்மஆசாமிகளால் கல்வீசி உடைக்கப்பட்டது. சிதம்பரம் அருகே துணிஞ்சிரமேடு கிராமத்தில்  நேற்று(வியாழக்கிழமை) நள்ளிரவு தனியார் பேருந்தின் கண்ணாடி கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது. மேலும் சிதம்பரம் அருகே சீர்காழி சாலையில் வேளக்குடி எனுமிடத்தில் மயிலாடுதுறை சென்ற அரசு பேருந்து ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

தொடர்ந்த பேருந்து கண்ணாடி உடைப்பு சம்பவம் நடைபெறுவதால் சிதம்பரம் பகுதியிலிருந்து இரவு நேர பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சிலர் பேருந்து கிடைக்காமல் பயணிகள் சிதம்பரம் பஸ் நிலையத்திலும், அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் நள்ளிரவு தங்கி காலை 6 மணிக்கு மேல் பேருந்தில் தங்களது ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →