முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.59 கோடி ஒதுக்கீடு

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 3.50 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. அதில், தற்போது, 2.75 லட்சம் ஏக்கரில் நெல் மற்றும் மக்காச்சோளம், சூரியகாந்தி மற்றும் பணப்பயிர்களான கடலை, பருத்தி, கரும்பு, தானியம்,

Updated On : 3 மே, 2013 at 5:30 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் ரூ.59 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 3.50 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. அதில், தற்போது, 2.75 லட்சம் ஏக்கரில் நெல் மற்றும் மக்காச்சோளம், சூரியகாந்தி மற்றும் பணப்பயிர்களான கடலை, பருத்தி, கரும்பு, தானியம், பயறு வகைகள் உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனவே பயிரிட்டதிலிருந்து போதுமான மழை மற்றும் நீர் ஆதாரம் இல்லாத நிலையில் வறட்சியால் விவசாய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் போட்ட முதலைக் கூட எடுக்க முடியாத நிலையிருந்தது.

அதேபோல், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, நரிக்குடி, காரியாபட்டி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் விளைநிலங்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறை சார்பில் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு விவரமாக அறிக்கை அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் நிதியமைச்சர் தலைமையில் உயர் மட்டக் குழுவினர் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் 1.72 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்காக ரூ.59 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதில், 50 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரமும், அதேபோல் நீர்ப்பாசன ஆதாரம் உள்ள இடங்களில் 50 சதவீத்திற்கு மேல் சாகுபடி இழப்பு ஏற்பட்டிருந்தால் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.4 ஆயிரமும், அதேபோல், மானாவாரி பயிரில் 50 சதவீதத்திற்கு மேல் சாகுபடி இழப்பு இருந்தால் ரூ.3 ஆயிரம் நிவ்ராணத் தொகையும் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கூறியதாவது:   இத்தொகை அனைத்தும் பாதிப்படைந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அடுத்த வாரம் முதல் நேரடியாக வரவு வைக்கப்பட இருக்கிறது. மேலும், இதுவரையில் கணக்கு தொடங்காத விவசாயிகள் உடனடியாக வேளாண்மை கூட்டுறவு வங்கி அல்லது தேசிய வங்கிகளில் கணக்கு தொடங்கி அதன் விவரங்களை உடனடியாக கிராம நிர்வாக அலுவலர்களிடம் அளிக்க வேண்டும். அவர்கள் சான்றொப்பம் இட்டு மறுபடியும் வங்கிக்கு அனுப்பி வைக்க விவசாயிகளின் கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.