முகப்பு
தற்போதைய செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் கட்டுமான கம்பிகளை ஏற்றி வந்த லாரிக்கு தீ வைப்பு-13 பேர் கைது

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையை சேர்ந்த சூர்யதேவ் என்ற கட்டுமான கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து சுமார் 14 டன் பெருமானமுள்ள கட்டுமான கம்பிகள் ஏற்றப்பட்டு சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.இந்த லாரியை பண்ருட்டியை சேர்ந்த டிரைவர் தனசேகர்(54) ஓட்டிக்

தற்போதைய செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் கட்டுமான கம்பிகளை ஏற்றி வந்த லாரிக்கு தீ வைப்பு-13 பேர் கைது

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையை சேர்ந்த சூர்யதேவ் என்ற கட்டுமான கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து சுமார் 14 டன் பெருமானமுள்ள கட்டுமான கம்பிகள் ஏற்றப்பட்டு சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.இந்த லாரியை பண்ருட்டியை சேர்ந்த டிரைவர் தனசேகர்(54) ஓட்டிக்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:37 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலையி்ல் இருந்து சனிக்கிழமை நள்ளிரவு கட்டுமான இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரியை மடக்கிய கும்பல் லாரி டிரைவரை அடித்து விரட்டு லாரியின் டீசல் டேங்கை உடைத்து தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடைய 13 பேரை கவரப்பேட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையை சேர்ந்த சூர்யதேவ் என்ற கட்டுமான கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து சுமார் 14 டன் பெருமானமுள்ள கட்டுமான கம்பிகள் ஏற்றப்பட்டு சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.இந்த லாரியை பண்ருட்டியை சேர்ந்த டிரைவர் தனசேகர்(54) ஓட்டிக் கொண்டு சென்ற நிலையில் புதுகும்மிடிப்பூண்டி சாலையில் இருந்து கவரப்பேட்டை-சத்தியவேடு சாலையை இந்த லாரி நெருங்கிய போது 15 பேர் அடங்கிய கும்பல் ஒன்று லாரியை வழிமறித்து உள்ளார்கள்.லாரி டிரைவர் லாரியை நிறுத்தியதும் அந்த கும்பல் லாரி டிரைவர் தனசேகரை அடித்து விரட்டி லாரியின் டீசல் டேங்கை உடைத்து தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் லாரி முற்றிலும் எரிந்து எலும்புக் கூடானது. லாரியில் இருந்த கம்பிகள் முழுக்க தீயின் வெப்பத்தால் வலிமை இழந்தது. இந்த சம்பவத்தில் லாரி முற்றிலும் கருகியதுடன், லாரியில் இருந்த பல லட்சக் கணக்கான மதிப்புள்ள இரும்பு கம்பிகளும் சேதமடைந்தன.

சம்பவ இடத்திற்கு விரைந்த திருவள்ளூர் எஸ்.பி ரூபேஷ் குமார் மீனா இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக கவரப்பேட்டை போலீஸார் தண்டலச்சேரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(53), பாஸ்கர்(37), பெர்னாட்ஷா(55), கிருஷ்ணன்(45), செல்வம்(35), சூர்யா(30),பழனி(40), மாசிலாமணி(58), சேகர்(19), பிரரபாகர்(19), மோகன்ராஜ்(18), செளந்தர்ராஜ்(18), ராஜா(20) ஆகிய 13 பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கோர்ட்டில் அடைத்தனர்.பா.ம.க தலைவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து கும்மிடிப்பூண்டியில் இதுவரை 3 பஸ்கள் உடைக்கப்பட்டது, அதில் ஒரு பஸ் மீது பெட்ரோல் குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சில கும்பலால் நடத்தப்படும் இந்த சம்பவங்களால் பாதுகாப்பு கருதி இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்க்ப்பட்டுள்ளதோடு இது குறித்து பொதுமக்கள் பெரும் அதிருப்தியிலும் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →