ஸ்ரீபெரும்புதூர் அருகே கழுத்து அறுத்து வாலிபர் கொலை
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியில் சனிக்கிழமை இரவு வீட்டின் முன்புறம் படுத்து தூங்கிய வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியில் சனிக்கிழமை இரவு வீட்டின் முன்புறம் படுத்து தூங்கிய வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு(35)பெயின்டர். இவர் சனிக்கிழமை இரவு தனது வீட்டின் முன்புறம் படுத்து தூங்கியுள்ளார். இதையடுத்து நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ராமூவின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பியுள்ளனர். இதில் ராமூ பயங்கரமாக அலறியுள்ளார். இதையடுத்து அவரது வீட்டினர் வெளியே வந்த பார்த்த போது ராமு கழுத்து அறிக்கப்பட்ட துடித்ததை தொடர்ந்து அவரது உறவினர்கள் ராமுவை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஆனால் ராமு மருத்துவமனைக்கு செல்லும் விழியிலேயே பலியாகியுள்ளார்.
தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் ராமுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.