பெண்ணிடம் ஐந்தரை பவுன் தாலி செயின் திருட்டு!
சிதம்பரம் ஜவகர்தெருவில் வசிப்பவர் அருளழகன் (32). இவரது மனைவி கவிதா (28). இருவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக்கல்லுரியில் மருந்தாளுநர்களாக பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை
சிதம்பரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் ஜன்னல் வழியாக மர்மநபர் ஒருவர் தாலிச்செயினை திருடிச்சென்றார்.
சிதம்பரம் ஜவகர்தெருவில் வசிப்பவர் அருளழகன் (32). இவரது மனைவி கவிதா (28). இருவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக்கல்லுரியில் மருந்தாளுநர்களாக பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் தாலிசெயின் கழற்றி தலையணை அருகே வைத்துக் கொண்டு கவிதா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஜன்னல் வழியாக கழியை விட்டு தாலிச் செயினை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.