தற்போதைய செய்திகள்

மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் சாவு

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சுப்பு என்பவரின் மகன் கிருஷ்ணன்(20). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூர்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே இன்று மாலையில் மழையை அடுத்து ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சுப்பு என்பவரின் மகன் கிருஷ்ணன்(20). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூர் கிராமத்தில் விடுமுறை நாளை கழிப்பதற்காக உறவினரான மணிகண்டன்(29) என்பவரின் வீட்டிற்கு இன்று காலையில் வந்துள்ளார்.இதையடுத்து, மாலையில் தோட்டத்திற்கு சென்று விட்டு கண்மாய்கரை வழியாக வீ்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென் மழை பெய்ததை அடுத்து ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கியதில் கிருஷ்ணன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில், மணிகண்டன் படுகாயம் அடைந்தார். இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிகண்டனை ராஜபாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக தளவாய்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT