அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதி வார்டன்கள் உள்ளிட்ட மூவர் தற்காலிக பணிநீக்கம்!
தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் விடுதிகளை அண்மையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவு சரியாக
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சரியாக பணிகளை மேற்கொள்ளாததால் விடுதி வார்டன்கள் உள்ளிட்ட மூவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் விடுதிகளை அண்மையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவு சரியாக இல்லை என்றும், கழிப்பறை, குடிநீர்தொட்டி உள்ளிட்ட விடுதி வளாகம் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. இதுகுறித்து விடுதி ஹவுஸ் வார்டன் மற்றும் ஃபோன் பாய் ஆகியோரிடம் விளக்கம் கேட்டார். சரியான விளக்கம் அளிக்கப்படாததால் ஹவுஸ் வார்டன்களாக பணியாற்றிய சிறப்பு அதிகாரிகள் ரத்தினபாலாஜி, தேவசகாயம் மற்றும் ஃபோன் பாய் மாபின்ராஜா ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்து நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.